ADDED : மே 18, 2026 01:57 AM
ஈரோடு:தொடக்க
கல்வி பட்டய தேர்வு இன்று துவங்குகிறது. காலை, 10:00 மணி முதல்
மதியம், 1:00 மணி வரை தேர்வு நடக்கிறது.
மாவட்டத்தில் முதலாமாண்டு
மாணவ, மாணவியர், 326 பேர் எழுதுகின்றனர். இன்று கற்கும் குழந்தை, 20ல்
கற்றலை எளிதாக்குதலும் மற்றும் மேம்படுத்தலும்-1, 22ல்
தமிழ்-தெலுங்கு-உருது கற்பித்தல்-1, இளஞ்சிறார் கல்வி-1 தேர்வு
நடக்கிறது. 26ல் ஆங்கிலம் கற்பித்தல்-1, 29ல் கணிதம் கற்பித்தல்-1,
ஜூன் 2ல் அறிவியல் கற்பித்தல்-1, ஜூன் 4ல் சமூக அறிவியல் கற்பித்தல்-1
தேர்வு நடக்கிறது.
இரண்டாமாண்டு மாணவ, மாணவிகள், 407 பேருக்கு 19ல்
இந்திய கல்வி துறை தேர்வுடன் துவங்குகிறது. 21ல் கற்றலை
எளிதாக்குதலும் மற்றும் மேம்படுத்துதலும்-2ம், 25ல்
தமிழ்-தெலுங்கு-உருது கற்பித்தல், இளஞ்சிறார் கல்வி-2ம், 27ல்
ஆங்கிலம் கற்பித்தல்-2, ஜூன் 1ல் கணிதம் கற்பித்தல்-2, ஜூன் 3ல்
அறிவியல் கற்பித்தல்-2, ஜூன் 5ல் சமூக அறிவியல் கற்பித்தல்-2 தேர்வு
நடக்கிறது. ஈரோடு மாவட்டத்தில் கலைமகள் கல்வி நிலையத்தில் அனைத்து
தேர்வுகளும் நடக்கிறது.
