/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
முதல்வர் கோப்பை போட்டி மாணவர்கள் சாதனை
/
முதல்வர் கோப்பை போட்டி மாணவர்கள் சாதனை
ADDED : அக் 10, 2024 01:44 AM
முதல்வர் கோப்பை போட்டி
மாணவர்கள் சாதனை
ஈரோடு, அக். 10-
சென்னையில், மாநில அளவில் நடந்து வரும் முதல்வர் கோப்பைக்கான போட்டியில், ஈரோடு மாணவர்கள் சாதனை படைத்துள்ளனர்.
மாநில அளவில் முதல்வர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகள், சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் நடந்து வருகிறது. 24ம் தேதி வரை நடக்க உள்ள இப்போட்டியில், பள்ளி, கல்லுாரி, மாற்றுத்திறனாளி, அரசு ஊழியர் மற்றும் பொதுமக்கள் என ஐந்து பிரிவுகளில் நடந்து வருகின்றன. இந்நிலையில் கடந்த, 4ம் தேதி முதல் 7ம் தேதி வரை நடந்த பேட்மின்டன் இரட்டையர் போட்டியில், பொது பிரிவில் ஈரோட்டை சேர்ந்த மாணவர்கள் லோகேஷ், நவீன் ஆகியோர் முதலிடம் பிடித்து தங்கப்பதக்கம் வென்றனர். இதேபோன்று ஜிம்னாஸ்டிக் போட்டியில், ஈரோடு மாவட்டம் கரட்டுப்பாளையத்தை சேர்ந்த கல்லுாரி மாணவி சினேகா முதலிடம், வ.உ.சி., பூங்காவில் உள்ள மாவட்ட விளையாட்டு விடுதியில் பயிற்சி பெற்ற மாணவி கலைச்செல்வி, இரண்டாவது இடம் பிடித்தனர்.

