/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
பிளேடை தின்ற கைதியால் ஈரோடு சிறையில் பரபரப்பு
/
பிளேடை தின்ற கைதியால் ஈரோடு சிறையில் பரபரப்பு
ADDED : டிச 14, 2024 01:41 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பிளேடை தின்ற கைதியால்
ஈரோடு சிறையில் பரபரப்பு
கோபி, டிச. 14-
ஈரோடு மாவட்ட சிறை, கோபியில் உள்ளது. இங்கு சில நாட்களுக்கு முன், இரு கைதிகளிடம், மொபைல்போன் மற்றும் சார்ஜர் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக கைதிகள் பாபு, விவேக் மீது, கோபி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்நிலையில் நேற்று மாலை, கைதி விவேக் பிளேடை தின்று விட்டதாக சக கைதிகள் கூச்சலிட்டனர். அதிர்ச்சியடைந்த சிறைத்துறையினர் அவரை மீட்டு, கோவை மருத்துவ கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

