தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/24ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம்

24ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம்

24ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம்


ADDED : ஜன 13, 2026 07:08 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 13, 2026 07:08 AM


Follow on Google
அ நிறம் | அளவு

திருப்பூர்: திருப்பூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மற்றும் மகளிர் திட்ட அலுவலகம் சார்பில், தனியார் துறை வேலை-வாய்ப்பு முகாம்,_ஏ.வி.பி., கலை அறிவியல் கல்லுாரியில், வரும் 24ம் தேதி நடக்கிறது.

அன்று கலை, 8:30 மணி முதல் மாலை, 3:00 மணி வரை நடைபெறும் முகாமில், 150 க்கும் மேற்பட்ட தனியார் துறை நிறுவனத்தினர் பங்கேற்று, தேவையான பணியாளர்களை தேர்வு செய்கின்றனர்.

எழுத படிக்க தெரிந்தவர்கள் முதல் பத்தாம் வகுப்பு, பிளஸ்2, ஐ.டி.ஐ., - டிப்ளமோ, பட்டப்படிப்பு, பொறியியல், தொழிற்-கல்வி முடித்தோர், கம்ப்யூட்டர் ஆபரேட்டர்கள், டிரைவர், தையல் பயிற்சி பெற்றோர் என அனைத்து கல்வித்தகுதியுள்ள வேலைதேடுவோரும் பங்கேற்கலாம்.

முகாமில் பங்கேற்று, தனியார் துறையில் வேலை வாய்ப்பு பெறுவதால், வேலை வாய்ப்பு அலுவலக பதிவு ரத்து செய்யப்ப-டாது. மேலும் விவரங்களுக்கு, 94990 55944 என்கிற எண்ணில் தொடர்புகொள்ளலாம்.

முகாமில் பங்கேற்கும் நிறுவனத்தினரும், வேலை தேடு-வோரும், www.tnprivatejobs.gov.in என்கிற தளத்தில் முன்பதிவு செய்ய வேண்டும் என மாவட்ட வேலை வாய்ப்பு அலுவ லகம், மகளிர் திட்ட அலுவலகம் அறிவித்துள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us