/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
ஈரோட்டில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்
/
ஈரோட்டில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்
ADDED : ஜூலை 10, 2025 01:26 AM
ஈரோடு, ஈரோட்டில், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டு மையம் சார்பில் வரும், 26ல் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடத்துவது குறித்த, முன்னேற்பாடு கூட்டம் நடந்தது.இதில் கலெக்டர் கந்தசாமி, பேசியதாவது:
ஈரோடு, நந்தா கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில் வரும், 26 காலை, 8:00 முதல் மாலை, 4:00 மணி வரை தனியார் துறை மெகா வேலைவாய்ப்பு முகாம் நடக்க உள்ளது. 200க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்கள், பல்வேறு காலிப்பணியிடங்களை நிரப்ப உள்ளனர். 5,000க்கும் மேற்பட்ட வேலை நாடுனர்கள் பங்கேற்க உள்ளனர். 8ம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு, டிப்ளமோ, நர்சிங், பார்மசி, பொறியியல் படித்தோர் என அனைத்து தரப்பினரும் பங்கேற்கலாம். கடந்த, 2024-25ம் ஆண்டு, 11 சிறிய முகாமில், 247 நிறுவனங்கள், 1,505 வேலைநாடுனர்கள் பங்கேற்றனர். 483 பேர் வேலை வாய்ப்பு பெற்றனர். 2 மாபெரும் வேலை வாய்ப்பு முகாமில், 409 தனியார் நிறுவனங்கள், 7,498 பேர் வேலை பெறுவோர் பங்கேற்று, 1,567 பேர் வேலைவாய்ப்பு பெற்றனர். இவ்வாறு பேசினார்.
மண்டல இணை இயக்குனர் ஜோதிமணி, உதவி இயக்குனர் ராதிகா, மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் சாந்தி உட்பட பலர் பங்கேற்றனர்.