ADDED : அக் 15, 2024 02:52 AM
அ நிறம் | அளவு
ஈரோடு, அக். 15-
ஈரோடு மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் சார்பில் வரும், 19 ல் திண்டல் வேளாளர் பொறியியல் மற்றும் தொழில் நுட்ப கல்லுாரியில் காலை, 8:00 மணி முதல் மாலை, 4:00 மணி வரை மெகா தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடக்க
உள்ளது.
அமைச்சர் முத்துசாமி, முகாமை துவக்கி வைத்து, பணி நியமன ஆணைகளை வழங்க உள்ளார். ஈரோடு மாவட்டம் உட்பட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த பல்வேறு முன்னணி தனியார் நிறுவனங்கள், தங்கள் நிறுவனத்துக்கு தேவையான நபர்களை தேர்வு செய்ய உள்ளனர்.
மேலும் விபரத்துக்கு, மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தை நேரில் அல்லது 86754-12356 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
