/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
பேச்சுப்போட்டிகளில் வென்ற மாணவர்களுக்கு பரிசு
/
பேச்சுப்போட்டிகளில் வென்ற மாணவர்களுக்கு பரிசு
ADDED : டிச 05, 2025 10:08 AM
ஈரோடு: தமிழ் வளர்ச்சி துறை சார்பில், காந்தியடிகள் பிறந்த நாளை முன்னிட்டு பள்ளி, கல்லுாரி மாணவர்களுக்கான பேச்சுப்போட்டி ஈரோட்டில் நடந்தது. கலெக்டர் அலுவலகத்தில் நடந்த பள்ளி மாணவர்களுக்கான பேச்சு போட்டியில், நடுவர்-களாக ஆசிரியர்கள் ஹரிராம், சம்பத், கந்தசாமி செயல்பட்டனர்.
இதில் அந்தியூர் அரசு மகளிர் மேல்நிலைப்-பள்ளி நிவேதாஸ்ரீ, ஓடத்துறை சோ.நி.அரசு மேல்-நிலைப்பள்ளி கவிபிரியா, வலையபாளையம் அரசு உயர்நிலைப்பள்ளி மெளலிஷா ஆகியோர் முறையே முதல் மூன்று பரிசு பெற்றனர். மொடச்சூர் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி அஜிதாஸ்ரீ, அ.செம்புளிச்சாம்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளி தமிழரசி சிறப்பு பரிசாக, தலா, 2,000 ரூபாய் வென்றனர்.
கல்லுாரி மாணவர் போட்டிக்கு, பேராசிரி-யர்கள் விஸ்வநாதன், மாணிக்கபூபதி, மோகன்ராஜ் நடுவர்களாக செயல்பட்டனர். ஈரோடு பாரதியார் பல்கலை விரிவாக்க மையம் அமல் உன்னிகிருஷ்ணன், ஈரோடு கலை அறி-வியல் கல்லுாரி ஜோஷ்வா டேனியல், கோபி கலை அறிவியல் கல்லுாரி பார்க்கவி ஆகியோர் முதல் மூன்று பரிசு பெற்றனர். முன்னாள் பிரதமர் நேரு பிறந்த நாளுக்கான பேச்சுப்போட்டி இன்று நடக்கிறது.

