/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
அரசு கல்லுாரி கலை திருவிழாவில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு
/
அரசு கல்லுாரி கலை திருவிழாவில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு
அரசு கல்லுாரி கலை திருவிழாவில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு
அரசு கல்லுாரி கலை திருவிழாவில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு
ADDED : அக் 31, 2025 02:05 AM
பவானி,  அரசு கல்லுாரிகளில் கலைத்திருவிழா நடத்த அரசு உத்தரவிட்டது. இதன்படி ஈரோடு மாவட்டத்தில், ஐந்து அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரி, மூன்று பாலிடெக்னிக் கல்லுாரி, ஒரு பொறியியல் கல்லுாரி என ஒன்பது கல்லுாரிகளில், கடந்த மாதம், 28ம் தேதி முதல் கடந்த, 25ம் தேதி வரை நடந்தது.
இதில், 3,௦௦௦ மாணவ, மாணவியர் கலந்து கொண்டனர். கவிதை, சிறுகதை, பேச்சு, பட்ஜெட் போர், புதையல் வேட்டை, இசை, நடனம் உள்ளிட்ட, 31 போட்டிகளில் திறமைகளை வெளிப்படுத்தினர். இப்போட்டிகளில் முதல் மூன்று இடங்களை பிடித்த, 93 மாணவ, மாணவியருக்கு பரிசளிக்கும் நிகழ்ச்சி, சித்தோடு ஐ.ஆர்.டி.டி., பொறியியல் கல்லுாரியில் நேற்று நடந்தது. கலெக்டர் கந்தசாமி தலை பாராட்டு சான்றிதழ் வழங்கினார்.
விழாவில் அவர் பேசியதாவது: கற்றது கை மண் அளவு; கல்லாதது உலகளவு என்ற கூற்றுக்கு ஏற்றாற்போல், நாம் மேன் மேலும் நிறைய விஷயங்களை கற்றுக்கொள்வதுடன், புத்தகங்கள் வாசிக்கும் பழக்கத்தை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும். தனிமனிதன் உயர வேண்டுமென்றால் அது கல்வி மட்டுமே சாத்தியமாகும். அப்படிபட்ட கல்வியை அனைவரும் உணர்ந்து கற்று வாழ்வில் முன்னேற வேண்டும். இவ்வாறு பேசினார்.
நிகழ்ச்சியில் கல்லுாரி முதல்வர் சாரதா, மக்கள் சிந்தனை பேரவை தலைவர் ஸ்டாலின் குணசேகரன் உட்பட பலர் கலந்து
கொண்டனர்.

