ADDED : மே 25, 2026 02:59 AM

அ நிறம் | அளவு
கோபி:கோபி
பஸ் ஸ்டாண்ட் அருகில் உள்ள சிக்னலை கடந்து, தினமும் ஆயிரக்கணக்கான
வாகனங்கள் பயணிக்கிறது. கோபி போக்குவரத்து போலீசார் மூன்று
சந்திப்புகளிலும் தானியங்கி சிக்னல்கள் அமைத்துள்ளனர்.
சிக்னல்
கட்டமைப்பில் தனியார் நிறுவனங்களின் விளம்பரத்துக்கு ஆர்வம்
காட்டும் போலீசார், தானியங்கி சிக்னல் முறையாக இயங்குகிறதா என்பதை
கண்காணிக்க, ஆர்வம் காட்டுவதில்லை. சிக்னலில் வாகன ஓட்டிகள், பச்சை
மற்றும் சிவப்பு விளக்கு ஒளிரும் என்ற நம்பிக்கையில்
காத்திருக்கின்றனர். ஆனால் சிறிய சிக்னல் கட்டமைப்பில் மட்டுமே
விளக்கு ஒளிர்கிறது. பிரதான சிக்னல் கட்டமைப்பு ஒளிராததால் குழப்பம்
அடைகின்றனர். போக்குவரத்து போலீசார் முறையாக சிக்னல் இயங்க
வழிவகை மேற்கொள்ள, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
