/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
ரூ.14.75 கோடி மதிப்பில் திட்டப்பணிகள் துவக்கம்
/
ரூ.14.75 கோடி மதிப்பில் திட்டப்பணிகள் துவக்கம்
ADDED : அக் 04, 2025 01:16 AM
காங்கேயம், குண்டடம் யூனியனுக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில், ௧௪.௭௫ கோடி ரூபாய் மதிப்பில் பல்வேறு திட்டப்பணிகளை, அமைச்சர் சுவாமிநாதன் தொடங்கி வைத்தார்.
காங்கேயம் குண்டடம் யூனியன் பகுதியில், முதல்வரின் கிராம சாலை மேம்பாட்டு திட்டம் மற்றும் துாய்மை இந்தியா இயக்கத்தில், 14.75 கோடி ரூபாய் மதிப்பில் சாலை மேம்பாட்டுபணி மற்றும் கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம் கட்டும் பணியை, தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன், நேற்று தொடங்கி வைத்தார்.
இதை தொடர்ந்து காங்கேயம் அருகே இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில், 5.30 கோடி ரூபாய் மதிப்பில், தலா, 300 சதுர அடியில் கட்டப்பட்டு வரும், 92 வீடுகளை பார்வையிட்டார்.
இந்நிகழ்வுகளில் அமைச்சருடன் தாசில்தார் மோகனன், காங்கேயம் நகராட்சி தலைவர் சூரியபிரகாஷ், ஒன்றிய தி.மு.க, செயலாளர்கள் கருணைபிரகாஷ், சிவானந்தன், செந்தில்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.