ADDED : அக் 04, 2026 06:15 AM
ஈரோடு:பொது
சுகாதாரம் மற்றும் நோய்தடுப்பு மருந்து துறை, கூடுதல் இயக்குநர்
நிர்மல்சன், ஈரோடு மாநகராட்சிக்கு உட்பட்ட சங்கு நகர் பகுதி,
திரு.வி.க. நகர்ப்புற நல மையம் மற்றும் ஈரோடு அரசு மருத்துவமனை ஆகிய
இடங்களில் ஆய்வு மேற்கொண்டார்.
காலாண்டு விடுமுறை முடிந்து அரசு
மற்றும் தனியார் பள்ளி, கல்லுாரிகள் திறக்கப்படுவதை முன்னிட்டு
அனைத்து கல்வி நிலையங்களிலும் புகை மருந்து தெளிக்க வேண்டும். மக்கள்
அதிகம் கூடும் இடங்கள் மற்றும் அரசு அலுவலகங்களில் கொசுப்புழு ஒழிப்பு
பணியை தீவிரமாக மேற்கொள்ள அறிவுறுத்தினார்.
காய்ச்சல்
பாதிப்புள்ள அனைத்து பகுதிகளிலும் வீடுகளுக்கு புகை மருந்து
தெளித்தல், அனைத்து வீடுகள், தொழிற்சாலைகள், பள்ளி மற்றும்
கல்லுாரிகளில் தொடர்ந்து கொசுப்புழு ஒழிப்பு பணி மேற்கொள்ளுதல்,
காய்ச்சல் தொடர்பான ஆய்வக பரிசோதனைகளை அதிகப்படுத்துதல் மற்றும்
அனைத்து தனியார் மருத்துவர்களுக்கும் டெங்கு காய்ச்சல் மற்றும் தொற்று
நோய்களுக்கு சிகிச்சை அளிப்பது தொடர்பாக மீண்டும் ஒருமுறை ஆலோசனைக்
கூட்டம் நடத்துதல் உள்ளிட்ட பல்வேறு ஆலோசனை வழங்கினார்.
