ADDED : ஜூன் 24, 2026 04:46 AM
அ நிறம் | அளவு
ஈரோடு:கிறிஸ்தவ
தேவாலயங்களில் பணிபுரியும் உபதேசியார், பணியாளர்கள்
நலவாரியத்தில் பதிவு பெற்ற உறுப்பினர்களுக்கு நலத்திட்ட உதவி
வழங்கப்படுகிறது.
கிறிஸ்தவ இனத்தை சேர்ந்த, 18 முதல், 60 வயது நிறைவு
பெறாதவர்கள், வேதியர்கள், சீஷப்பிள்ளைகள், பாடகர்கள், கல்லறை
பணியாளர்கள், கிறிஸ்தவ அனாதை இல்லங்கள், தொழுநோயாளியர் மறுவாழ்வு
இல்ல பணியாளர்கள், மாத ஊதியம் இல்லாத பணியாளர்கள், வாரிய
உறுப்பினராக பதிவு செய்து உதவி பெறலாம். இணைய தளம், www.cwb.tn.gov.in
ல் பதிவு செய்து உதவி பெறலாம். கூடுதல் விபரத்துக்கு, ஈரோடு கலெக்டர்
அலுவலகத்தில் உள்ள, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும்
சிறுபான்மையின நல அலுவலகத்தை அணுகலாம்.
