ADDED : மார் 10, 2026 04:22 AM
அ நிறம் | அளவு
தாராபுரம்: தாராபுரத்தை அடுத்த தளவாய்பட்டணம், சக்தி காளியம்மன் நகரை சேர்ந்தவர் தினகரன், 26; தான் பணி புரியும் எடை நிலை-யத்தின் முன், டி.வி.எஸ்., மொபட்டை, நேற்று முன்தினம் இரவு நிறுத்தியிருந்தார்.
மறுநாள் பார்க்கையில் மொபட்டை காண-வில்லை. இதுகுறித்த புகாரின்படி வழக்குப்பதிந்த அலங்கியம் போலீசார், சிசிடிவி கேமரா காட்சிகள் அடிப்படையில் விசாரித்-தனர். இதில் அதே பகுதியில் ஒரு செங்கல் சூளையில் பணிபு-ரியும், சீர்காழியை சேர்ந்த கார்த்திகேயன், 38, திருடி சென்றதை கண்டுபிடித்தனர். அவரை கைது செய்து, மொபட்டை மீட்டனர்.
