/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
சிறுமியரிடம் அத்துமீறிய தொழிலாளிக்கு காப்பு
/
சிறுமியரிடம் அத்துமீறிய தொழிலாளிக்கு காப்பு
ADDED : ஏப் 24, 2025 01:56 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சத்தியமங்கலம்:
சத்தியமங்கலம் அடுத்த கொமராபாளையத்தை சேர்ந்த 9, 5 வயதுடைய இரண்டு சிறுமியர், நேற்று முன்தினம் இரவு கோவில் பகுதியில் விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது குமரன் கரடு பகுதியை சேர்ந்த கட்டட தொழிலாளி பாபு, 31, சிறுமியரிடம் தவறான செய்கையில் ஈடுபட்டுள்ளார். இதையறிந்த சிறுமியரின் பெற்றோர் சத்தியமங்கலம் மகளிர் காவல் நிலையத்தில் நேற்று புகாரளித்தனர். அதன்படி, பாபுவை கைது செய்து சத்திய
மங்கலம் கிளை சிறையில் அடைத்தனர்.