/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
கிராம சபை கூட்டங்களில் கறுப்பு கொடியேந்தி எதிர்ப்பு
/
கிராம சபை கூட்டங்களில் கறுப்பு கொடியேந்தி எதிர்ப்பு
கிராம சபை கூட்டங்களில் கறுப்பு கொடியேந்தி எதிர்ப்பு
கிராம சபை கூட்டங்களில் கறுப்பு கொடியேந்தி எதிர்ப்பு
ADDED : ஜன 27, 2025 02:23 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காங்கேயம்: காங்கேயம் ஊராட்சி ஒன்றியத்தில், குடியரசு தினத்தை ஒட்டி அனைத்து ஊராட்சிகளிலும் நேற்று கிராமசபை கூட்டம் நடந்தது. இதில் பங்கேற்ற விவசாயிகள், கால்நடைகளுடன் கறுப்புக் கொடி ஏந்தி கலந்து கொண்டனர்.
தங்கள் கால்நடைகளை தொடர்ந்து தெருநாய்கள் கடித்து வருகின்-றன. அரசு உரிய இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுதொடர்பாக கடந்த அக்.,௨ல் நடந்த கிராமசபை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றி அரசுக்கு அனுப்பியும் நடவ-டிக்கை எடுக்கவில்லை. இதனால் திருப்பூர் மாவட்ட நிர்வாகம், தமிழக அரசை கண்டித்து, கறுப்புக்கொடி ஏந்தி பங்கேற்றதாக தெரிவித்தனர்.