/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
கறுப்பு பேட்ஜ் அணிந்து மருத்துவர்கள் எதிர்ப்பு
/
கறுப்பு பேட்ஜ் அணிந்து மருத்துவர்கள் எதிர்ப்பு
ADDED : நவ 15, 2024 01:58 AM
கறுப்பு பேட்ஜ் அணிந்து மருத்துவர்கள் எதிர்ப்பு
அந்தியூர், நவ. 15-
சென்னையில் கிண்டி மருத்துவமனையில், அரசு டாக்டரை கத்தியால் குத்திய சம்பவத்தை கண்டித்து, தமிழகம் முழுவதும் அரசு மருத்துவமனைகளில், மருத்துவர்கள் நேற்று கருப்பு பேட்ஜ் அணிந்து எதிர்ப்பு தெரிவித்து பணியில் ஈடுபட்டனர். இதன்படி அந்தியூர் அரசு மருத்துவமனையில் மருத்துவ அதிகாரி பிரகாஷ் தலைமையிலான மருத்துவர்கள், கருப்பு பேட்ஜ் அணிந்து எதிர்ப்பு தெரிவித்தனர்.
*பெருந்துறை அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில், தமிழ்நாடு அரசு மருத்துவர் சங்க பெருந்துறை கிளை தலைவர் செந்தில்ராஜ் தலைமையில், மருத்துவர்கள் கறுப்பு பேட்ச் அணிந்து, மருத்துவமனை நுழைவுவாயில் முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில், 60 பெண் மருத்துவர்கள் உட்பட, 150 மருத்துவர்கள் கலந்து கொண்டனர்.
சீரடி சாய்பாபா கோவில்