/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
சீமான் கைதை கண்டித்து ஆர்ப்பாட்டம்
/
சீமான் கைதை கண்டித்து ஆர்ப்பாட்டம்
ADDED : ஜன 01, 2025 01:18 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு, ஜன. 1-
சென்னை அண்ணா பல்கலை மாணவி பாலியல் சம்பவத்தை கண்டித்து, சென்னை வள்ளுவர் கோட்டத்தில் தடையை மீறி நேற்று ஆர்ப்பாட்டம் செய்ய முயன்ற, நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கைது செய்யப்பட்டார்.
இதற்கு கண்டனம் தெரிவித்து, ஈரோட்டில் பெருந்துறை சாலை, கலெக்டர் அலுவலகம் அருகே நாம் தமிழர் கட்சியினர் கூடினர். ஊர்வலமாக கலெக்டர் அலுவலக நுழைவுவாயில் வரை வந்தனர். 'ஊர்வலம், ஆர்ப்பாட்டம் செய்ய அனுமதி இல்லை' எனக்கூறி போலீசார் தடுத்தனர். அங்கேயே ஆர்ப்பாட்டம் செய்ததால், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக, மண்டல தலைவர் நவநீதன், வடக்கு மாவட்ட செயலாளர் மோதிலால் பிரசாந்த் உள்ளிட்ட, 60 பேரையும் கைது செய்தனர்.