தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/மொபைல்போன் டவர் அமைக்க எதிர்ப்பு

மொபைல்போன் டவர் அமைக்க எதிர்ப்பு

மொபைல்போன் டவர் அமைக்க எதிர்ப்பு


ADDED : அக் 06, 2026 05:26 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 06, 2026 05:26 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஈரோடு; ஆப்பக்கூடலை அடுத்த கந்தசாமி நகரை சேர்ந்த முனியப்பன், ஊர்மக்கள் சார்பில், ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில், மனு வழங்கி கூறிய-தாவது:

ஆப்பக்கூடல் அடுத்த கந்தசாமி நகர், அம்பேத்கர் நகர், காந்தி நகர், மாகாளி வீதி, ராஜாஜி வீதி, தபால்காரர் வீதி பகுதியில், 1,200க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கிறோம். இங்கு ஏற்கனவே ஜியோ மொபைல் போன் டவர் உள்ளது. இச்சூ-ழலில் கந்தசாமி நகர் பகுதியில் ஏர்டெல் நிறுவ-னத்தின் மொபைல் போன் டவரை அமைக்க கட்-டுமான பணி நடந்து வருகிறது. தனியார் இடத்தில் டவர் அமைந்தாலும், கதிர் அலை வீச்சால் மக்கள் பாதிக்கப்படுவர். எனவே அங்கு டவர் அமைக்கக்-கூடாது. மாவட்ட நிர்வாகம் தடை செய்ய வேண்டும். இவ்வாறு கூறினர்.குவாரியை நிரந்தரமாக

மூட வலியுறுத்தி மனு

ஈரோடு, அக். 6

சென்னிமலை அருகே முருங்கத்தொழுவை சேர்ந்த மக்கள், ஈரோடு கலெக்டர் அலுவல-கத்தில், மனு வழங்கி கூறியதாவது:

முழுங்கத்தொழுவு பகுதியில் தனியார் கல் குவாரி, கிரசர் இயங்குகிறது. இங்கிருந்து அதிகப்-படியான சத்தம், அதிர்வு, துாசி பறப்பதால் மக்கள் பாதிக்கப்படுகின்றனர். அதிக பாரம் ஏற்றிய வாக-னங்கள் செல்வதால், சாலைகள் சேதமடைகின்-றன. சென்னிமலை டவுன் பஞ்., சாலைகளில், 10 டன் எடைக்கும் அதிகமாக வாகனங்கள் செல்ல தடை இருந்தும், பயணிக்கின்றனர். குவாரியிலும், சாலைகளில் செல்லும் கனரக வாகனங்களிலும் ஆய்வு செய்து, இதுபோன்ற மாசு ஏற்படுத்தும் ஆலைகளை நிரந்தரமாக மூட வேண்டும். இவ்-வாறு கூறினர்.

50 பேருக்கு பதவி உயர்வு

ஈரோடு, அக். 6

ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில், மக்கள் குறைதீர் கூட்டம் கலெக்டர் கந்தசாமி தலை-மையில் நடந்தது. டி.ஆர்.ஓ., சாந்தகுமார் முன்-னிலை வகித்தார். இதில் முதியோர் உதவித்-தொகை, ஆதார் கார்டு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு உட்பட பல்வேறு கோரிக்கை தொடர்பாக, 320 மனுக்கள் பெறப்பட்டு, துறை விசாரணைக்கு அனுப்பி வைக்கப்பட்டன.

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல விடுதிகள், பழங்குடியினர் நல, உண்டு உறைவிட பள்ளிகளில் சிறப்பு காலமுறை ஊதிய துாய்மை பணியாளர்களாக பணியாற்றிய, 50 நபர்களுக்கு சமையலராக பதவி உயர்வுக்கான ஆணை மற்றும் 11 மாணவ, மாணவியருக்கு உயர் கல்-வியில் சேர்க்கப்பட்டதற்கான ஆணை வழங்கப்-பட்டது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us