ADDED : நவ 28, 2026 07:33 AM

புன்செய்புளியம்பட்டி:புன்செய்புளியம்பட்டியை
அடுத்த மாராயிபாளையத்தில், 200க்கும் மேற்பட்ட வீடுகளில் மக்கள்
வசித்து வருகின்றனர். கிராமத்தில் புதிய கல்குவாரி அமைக்க
கனிமவளத்துறை அனுமதி வழங்கியுள்ளது. இதனால் நிலத்தடி நீர்மட்டம்
பாதிக்கும் என்று விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர்.
வெடி
வைத்தல், கல் உடைப்பு மற்றும் கனரக வாகன போக்குவரத்தால் காற்று மாசு,
ஒலி மாசு அதிகரித்து உடல்நல பாதிப்பு ஏற்படும் என்றும் கூறுகின்றனர்.
கலெக்டர் மற்றும் அதிகாரிகளிடம்
மனு அளித்தும், 10 ஏக்கர் பரப்பளவில் கல்குவாரி பணி தொடங்கி
நடக்கிறது. இதனால் குவாரிக்கு அனுமதி வழங்கியுள்ளதை கண்டித்து,
10க்கும் மேற்பட்ட கிராம விவசாயிகள் மற்றும் மக்கள், 200க்கும்
மேற்பட்டோர் நேற்று காலை, மாதம்பாளையம் வி.ஏ.ஓ., அலுவலகம் முன்,
தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க மாவட்ட அமைப்பு செயலாளர் ஜோதி
அருணாசலம் தலைமையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
