/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
மாநகராட்சி நடைபாதை பூங்காவுக்கு பூட்டு நடைபயிற்சி செல்வோர் போராட்டம்
/
மாநகராட்சி நடைபாதை பூங்காவுக்கு பூட்டு நடைபயிற்சி செல்வோர் போராட்டம்
மாநகராட்சி நடைபாதை பூங்காவுக்கு பூட்டு நடைபயிற்சி செல்வோர் போராட்டம்
மாநகராட்சி நடைபாதை பூங்காவுக்கு பூட்டு நடைபயிற்சி செல்வோர் போராட்டம்
ADDED : ஜன 04, 2025 01:42 AM
ஈரோடு, ஜன. 4-
கனிராவுத்தர் குளம் நடைபாதை பூங்காவை மாநகராட்சியினர் பூட்டியதால், நடைபாதை செல்வோர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஈரோடு மாநகராட்சி இரண்டாம் மண்டபத்துக்கு உட்பட்ட, கனி ராவுத்தர் குளத்தை சுற்றி ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் பேவர் பிளாக் கற்களால் பதித்து, நடைபாதை அமைத்து, அமர்வதற்கு இருக்கைகளும் அமைத்தனர். போக்குவரத்து தொந்தரவின்றி, அப்பகுதியில் வசிக்கும் ஏராளமானவர்கள் நடைபாதை, இருபுறமுள்ள பூங்காவையும் பயன்படுத்தினர். குறிப்பாக காலை, மாலை, இரவில் நடைபயிற்சி மேற்கொண்டனர். கடந்த சில மாதமாக பூங்காவை சமூக விரோதிகள் ஆக்கிரமித்து மது விற்பது, மது குடிப்பது என இரவில் அனைத்து வகை சமூக விரோத செயல்களையும் அரங்கேற்றினர். மேலும் அங்கு மலம் கழித்தும், மது பாட்டில்களை உடைத்தும் நாசம் செய்தனர். இதுபற்றி மாநகராட்சியில் அப்பகுதி மக்கள் புகார் செய்தனர். போலீஸ் பாதுகாப்பு போட்டு, மது விற்பனை, இரவில் நடக்கும் சட்ட விரோத செயல்களை தடுக்க வலியுறுத்தினர்.
இந்நிலையில் மாநகராட்சி அதிகாரிகள், நடைபாதை பூங்காவுக்கு செல்லும் கேட்டை இரண்டு நாட்களுக்கு முன் பூட்டிவிட்டனர். இதனால் நடைபயிற்சி செல்வோர் நேற்று மாலை பூங்கா நுழைவு பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்டனர். மாநகராட்சி அதிகாரிகள், போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர்.

