ADDED : பிப் 21, 2026 09:19 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு: சுமை துாக்குவோரின் மாநில பாதுகாப்பு சங்கம் சார்பில், ஈரோடு மாணிக்கம்பாளையத்தில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக மண்டல அலுவலகம் முன், சுமை துாக்கும் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர். மாவட்ட செயலர் ராஜு தலைமை வகித்தார். மாவட்ட தலைவர் மோகன்குமார் முன்னிலை வகித்தார்.
சுமை துாக்கும் தொழிலாளர்களுக்கு நடத்த வேண்டிய சங்க அங்கீகார தேர்தலை நடத்த வேண்டும். வருகை பதிவேட்டில் பெயர் இன்றி சுமைப்பணி செய்யும் தொழிலாளர்கள் பெயர்களை வருகை பதிவேட்டில் சேர்க்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் செய்தனர்.

