/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
ரேஷனில் தேங்காய் எண்ணெய் வழங்க கோரி ஆர்ப்பாட்டம்
/
ரேஷனில் தேங்காய் எண்ணெய் வழங்க கோரி ஆர்ப்பாட்டம்
ADDED : நவ 30, 2024 01:21 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ரேஷனில் தேங்காய் எண்ணெய்
வழங்க கோரி ஆர்ப்பாட்டம்
கொடுமுடி, நவ. 30-
ரேஷன்
கடைகளில் பாமாயிலுக்கு பதிலாக, தேங்காய் எண்ணெய் வழங்க அரசு
நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள்
சங்கம் மற்றும் ஏர்முனை இளைஞர் அணி சார்பில், கொடுமுடி அருகே
இச்சிப்பாளையத்தில் அமைந்துள்ள அஞ்சூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு
கடன் சங்கம் முன் நடந்தது. தமிழக விவசாயிகள் சங்க மாநில தலைவர்
சண்முகம் தலைமை வகித்தார். ஏர்முனை இளைஞர் அணி மாவட்ட தலைவர் யுவராஜ்,
கரூர் மாவட்ட தலைவர் பாலுகுட்டி உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.