/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
சிப்காட் நிலத்துக்கு இழப்பீடு கோரி போராட்டம்; ஆர்.டி.ஓ.,விடம் மனு
/
சிப்காட் நிலத்துக்கு இழப்பீடு கோரி போராட்டம்; ஆர்.டி.ஓ.,விடம் மனு
சிப்காட் நிலத்துக்கு இழப்பீடு கோரி போராட்டம்; ஆர்.டி.ஓ.,விடம் மனு
சிப்காட் நிலத்துக்கு இழப்பீடு கோரி போராட்டம்; ஆர்.டி.ஓ.,விடம் மனு
ADDED : ஆக 22, 2025 01:07 AM
ஈரோடு பெருந்துறை சிப்காட்டால் பாதிக்கப்பட்ட மக்கள் நலச்சங்க ஒருங்கிணைப்பாளர் சின்னசாமி மற்றும் நிர்வாகிகள், ஈரோடு ஆர்.டி.ஓ., சிந்துஜாவிடம் நேற்று வழங்கிய மனுவில் கூறியதாவது:
பெருந்துறை சிப்காட்டுக்காக, 30 ஆண்டுக்கு முன் விவசாயிகளிடம் இருந்து, 2,709 ஏக்கர் நிலம் அரசால் கையகப்படுத்தப்பட்டது. ஆனால் குறைவான தொகையே வழங்கப்பட்டது. இதிலும் பாரபட்சம் காட்டப்பட்டது. பல வழக்குகளுக்கு இடையே முழுமையான இழப்பீடு கிடைக்கவில்லை.
இறுதியாக நீதிமன்ற உத்தரவுப்படி ஏக்கருக்கு நிலமதிப்புப்படி, 2.50 லட்சம், ஆறுதல் தொகை - 30 சதவீதம், கூடுதல் சந்தை மதிப்பு - 12 சதவீதம், நீதிமன்ற தீர்ப்புப்படி வட்டி - 15 சதவீதம், நிலத்தில் இருந்த கட்டுமானம், மரங்களின் மதிப்பை சேர்த்து வழங்க வேண்டும். இதை அமலாக்க கோரி வரும் செப்., 18 முதல் ஈரோடு ஆர்.டி.ஓ., அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டம் நடத்த தீர்மானித்துள்ளோம். முன்னதாக அரசு முறையான முயற்சி மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு தெரிவித்துள்ளார்.