/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
பவானிசாகர் அருகே குடிநீர் கேட்டு மறியல்
/
பவானிசாகர் அருகே குடிநீர் கேட்டு மறியல்
ADDED : ஜூலை 02, 2025 01:02 AM
புன்செய்புளியம்பட்டி பவானிசாகர் அருகே தொப்பம்பாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட அண்ணா நகர், ஜீவா நகர் மற்றும் கணபதி நகர் ஆகிய கிராமங்களில், 500க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர்.
இவர்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யும் பிரதான குழாயில் அடிக்கடி உடைப்பு ஏற்படுவதால் வினியோகம் செய்வதில் பாதிப்பு ஏற்படுகிறது. இரண்டு வாரமாக குடிநீர் வினியோகம் இல்லாததால், புன்செய்புளியம்பட்டி-பவானிசாகர் சாலை, அண்ணா நகர் பஸ் நிறுத்தம் அருகே, 200க்கும் மேற்பட்டோர் சாலை மறியலில் நேற்று ஈடுபட்டனர்.
இதனால் போக்குவரத்து பாதித்தது. பவானிசாகர் பி.டி.,ஓ., இந்திராணி மற்றும் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். சீராக குடிநீர் வினியோகம் செய்வதாக உறுதி கூறியதால் கலைந்து சென்றனர்.
மறியலால் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.