/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
வீட்டு மனை பட்டா கோரி காத்திருப்பு போராட்டம்
/
வீட்டு மனை பட்டா கோரி காத்திருப்பு போராட்டம்
ADDED : டிச 09, 2025 10:22 AM
கோபி: கோபி அருகே பெரிய கொடிவேரி, சென்றாயம்-பாளையம் கிராமத்தில், முன்னாள் முதல்வர் கருணாநிதியால், தலித் விவசாய கூலி தொழி-லாளர்களுக்கு நிலம் வழங்கி, பட்டா இருந்தும், அதற்கான ஆவணத்தில் பட்டா ரத்து செய்யப்பட்-டுள்ளது.
மீண்டும் பட்டதாரர்களுக்கு பட்டா வழங்க கோரியும், கோபி தாலுகாவில் பஞ்சமி நிலங்-களை மீட்டு, வீடு இல்லாத தலித் மக்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்க கோரி, விடு-தலை சிறுத்தைகள் கட்சி முன்னாள் மாவட்ட செயலாளர் அம்பேத்கர் தலைமையில், கோபி தாலுகா ஆபீசில் நேற்று மதியம் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கோபி போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி, உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி கூறவே கலைந்து சென்றனர்.

