/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
காப்பீடு திட்டத்தை முறையாக அமலாக்க கோரி ஆர்ப்பாட்டம்
/
காப்பீடு திட்டத்தை முறையாக அமலாக்க கோரி ஆர்ப்பாட்டம்
காப்பீடு திட்டத்தை முறையாக அமலாக்க கோரி ஆர்ப்பாட்டம்
காப்பீடு திட்டத்தை முறையாக அமலாக்க கோரி ஆர்ப்பாட்டம்
ADDED : ஜூன் 17, 2025 02:10 AM
ஈரோடு, தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க, ஈரோடு மாவட்ட தலைவர் ரமேஷ் தலைமையில், ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மாலை மனு வழங்கி, ஆர்ப்பாட்டம் செய்தனர். மாவட்ட செயலர் விஜயமனோகரன், கோரிக்கை பற்றி பேசினார்.
அரசு ஊழியர்களுக்கு வழங்கப்பட்டுள்ள என்.எச்.ஐ.எஸ்., காப்பீட்டை அரசே ஏற்று நடத்த வேண்டும். 5,000 முதல், அனைத்து செலவினங்களையும் காப்பீடு திட்டத்தில் வழங்க வேண்டும்.
முழுமையான பணமில்லா பரிவர்த்தனை பெறும்படி வழி செய்ய வேண்டும். இக்காப்பீடு திட்டத்தில் சிகிச்சை பெற்ற அலுவலர்கள், ஊழியர்களுக்கு முழுமையான மருத்துவ செலவு வழங்கப்படவில்லை. நோயால் போராடும் பலருக்கும், இக்காப்பீடு திட்டத்தால் எந்த பலனும் இல்லை. எனவே காப்பீடு பலன்கள் முழுமையாக கிடைக்க செய்ய வலியுறுத்தினர்.