ADDED : ஜன 28, 2025 06:52 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னிமலை: ஈ.வெ.ரா.,வை இழிவாக பேசி வரும், நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானை கண்டித்து, புரட்சிகர இளைஞர் முன்னணி சார்பில், சென்னிமலை பஸ் ஸ்டாண்ட் முன் நேற்று மாலை ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஈ.வெ.ரா.,வை அவதுாறாக பேசுவதை சீமான் நிறுத்த வேண்டும் என வலியுறுத்தி கோஷமிட்டனர். ஆர்ப்பாட்டத்தில் சென்னிமலை பகுதி பொறுப்பாளர் செல்வராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

