ADDED : மே 14, 2026 06:15 AM

அ நிறம் | அளவு
ஈரோடு :ஈரோடு டீசல் லோகோ ஷெட் டில், டி.ஆர்.இ.யு. (தட்சின் ரயில்வே எம்ப்ளாயிஸ் யூனியன்) சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.
கிளை தலைவர் சந்தோஷ் தலைமை வகித்தார். செயலாளர் சதீஷ்குமார் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார். துணை செயலாளர் மணி நன்றி கூறினார். இதில், 50க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். இதே போல் எலக்ட்ரிக்கல் லோகோ ஷெட்டிலும் ஆர்ப்பாட்டம் நடந்தது. ரயில்வே தொழிலாளர் பணியிடங்களை சரண்டர் செய்து பணியிடம் குறைக்கப்பட்டது கண்டிக்கதக்கது. இந்தியா முழுவதும், 29,608 பதவிகளை சரண்டர் செய்யும் உத்தரவை ரத்து செய்ய வேண்டும்.
ரயில்வேயில் உள்ள காலி பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும். ஆண்டுதோறும் 2 சதவீதம் பதவிகளை குறைக்கும் கொள்கையை கைவிட வேண்டும் என்று வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது.
