ADDED : ஆக 19, 2026 06:12 AM
அ நிறம் | அளவு
பவானி:அம்மாபேட்டை
அருகே குறிச்சி பஞ்., செல்லிகவுண்டனுாரில், நுாற்றுக்கும்
மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். இவர்களுக்கு பஞ்.,
நிர்வாகம் சார்பில் போர்வெல் குடிநீர் வழங்கப்பட்டது. போர்வெல்
தண்ணீர் நச்சுத்தன்மை அடைந்து, குடிப்பதற்கு உதவாமல் போனது.
இதனால்
இரண்டு ஆண்டுகளாக, 3 கி.மீ. சென்று தண்ணீரை கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் காவிரி குடிநீர் கேட்டு, 50க்கும் மேற்பட்டோர், குறிச்சி
பஞ்., அலுவலகத்தின் முன்பு நேற்று காத்திருப்பு போராட்டத்தில்
ஈடுபட்டனர். அம்மாபேட்டை போலீசார், அம்மாபேட்டை பி.டி.ஓ.,
இந்திராணி பேச்சுவார்த்தை நடத்தினர். ஒரு வாரத்துக்குள் காவிரி
தண்ணீர் வழங்கப்படும் என்று கூறியதால், மக்கள் கலைந்து சென்றனர்.
