ADDED : ஜூலை 22, 2026 06:31 AM
அ நிறம் | அளவு
பவானி:கர்நாடக
அரசு மேகதாது அணை கட்டுவதை தடுக்க வலியுறுத்தி, இந்திய ஜனநாயக
கட்சி சார்பில், பவானி, அந்தியூர் பிரிவில் கண்டன ஆர்ப்பாட்டம் நேற்று
நடந்தது. ஈரோடு மேற்கு மாவட்ட தலைவர் லாரன்ஸ் தலைமை வகித்தார்.
நிர்வாகிகள்,
தொண்டர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர். நீதிமன்ற உத்தரவை
மதிக்காத கர்நாடக அரசை கண்டித்து கோஷமிட்டனர்.
