ADDED : மே 23, 2026 06:06 AM
அ நிறம் | அளவு
பவானி:அம்மாபேட்டை அருகே மூணாஞ்சாவடியில், டாஸ்மாக் கடை இயங்கி வருகிறது. கடையில், 24 மணி நேரமும் மது விற்பனை நடக்கிறது. கடை அருகே அரசுப்பள்ளி, கோவில் உள்ளது. சில நாட்களுக்கு முன் கடையில் மது அருந்திய மது பிரியர்கள், சாலையோரம் நடந்து சென்ற பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு தந்துள்ளனர்.
இதனால் அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள், 30க்கும் மேற்பட்டோர், நேற்று மாலை, டாஸ்மாக் கடை முன், கடையை அகற்ற வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அம்மாபேட்டை போலீசார், அந்தியூர் தாசில்தார் இளஞ்செழியன் உள்ளிட்ட வருவாய் துறையினர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். கடையை பத்து நாட்களுக்குள் அகற்றி விடுவதாக உறுதியளிக்கவே, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.
