ADDED : ஏப் 03, 2026 03:47 AM
அ நிறம் | அளவு
பவானி, பவானி அருகே ஜம்பை டவுன் பஞ்., ஒன்பதாவது வார்டு பத்ரகாளியம்மன் கோவில் வீதி, சக்தி நகரில், 10 ஆண்டுகளுக்கும் மேலாக, 30 குடும்பத்தினர் வசிக்கின்றனர்.
இவர்கள் தங்கள் பகுதிக்கு சாலை, குடிநீர் போன்ற அடிப்படை வசதி கேட்டு அதிகாரிகளிடம் பல முறை மனு கொடுத்தும் நடவடிக்கை இல்லை. இதனால் எந்த வேட்பாளரும், பொய் வாக்குறுதி சொல்லிக்கொண்டு, எங்கள் பகுதிக்கு ஓட்டு கேட்டு வரவேண்டாம் என்று பேனர் வைத்து, எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளனர்.
