/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
வனத்துறையை கண்டித்து கடம்பூரில் ஆர்ப்பாட்டம்
/
வனத்துறையை கண்டித்து கடம்பூரில் ஆர்ப்பாட்டம்
ADDED : நவ 05, 2025 12:56 AM
சத்தியமங்கலம், கடம்பூரில் வனத்துறையை கண்டித்து, தமிழ்நாடு மலை வாழ் மக்கள் சங்கத்தின் சார்பில், கடம்பூர் வனத்துறை அலுவலகம் முன், நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. சிவராஜ் தலைமை வகித்தார். சங்க மாநில தலைவர் முன்னாள் எம்.எல்.ஏ., டில்லிபாபு கண்டன உரையாற்றினார்.
கடம்பூர் வனத்துறை அதிகாரிகள் ஆடு, மாடு, மேய்க்க தடை விதித்து வருகின்றனர். மலைவாழ் மக்களை மிரட்டி பணம் பறிக்கின்றனர். வன உரிமை சட்டத்தை அமல்படுத்த வேண்டும். மலைவாழ் மக்களை மிரட்டும் வனத்துறை அதிகாரிகளை வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தி நடந்த ஆர்ப்பாட்டத்தில், மலை கிராம மக்கள் நுாற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

