ADDED : ஜூலை 31, 2026 05:20 AM
அ நிறம் | அளவு
ஈரோடு:ஈரோடு
மாவட்ட பீடி சுருட்டு தொழிலாளர் சங்கம் - சி.ஐ.டி.யு., சார்பில்,
வீரப்பன்சத்திரத்தில் ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட தலைவர்
சித்தாராபேகம், துணை தலைவர் கைபாணி, சி.ஐ.டி.யு., நிர்வாகிகள் கலந்து
கொண்டனர்.
பீடித் தொழிலாளர்களுக்கு ஊதிய உயர்வு கோரிக்கை குறித்து
முத்தரப்பு பேச்சுவார்த்தை துவங்கி, தீர்வு காண வேண்டும். ஓய்வு பெறும்
பீடி தொழிலாளிக்கு மத்திய அரசு சேமநல நிதி திட்டம் மூலம் மாதம்,
6,000 ரூபாய் ஓய்வூதியம் வழங்க வேண்டும். பீடி சுற்றும்
தொழிலாளர்களுக்கு, 1,000 பீடிக்கு அடிப்படை சம்பளமாக, 300 ரூபாய்
நிர்ணயிக்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் செய்தனர்.
