தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ குறைந்தபட்ச ஊதியம் கோரி வரும் 7 ல் காத்திருப்பு போராட்டம்

குறைந்தபட்ச ஊதியம் கோரி வரும் 7 ல் காத்திருப்பு போராட்டம்

குறைந்தபட்ச ஊதியம் கோரி வரும் 7 ல் காத்திருப்பு போராட்டம்


ADDED : ஜன 02, 2025 01:38 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 02, 2025 01:38 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஈரோடு, ஜன. 2-

ஈரோடு மாவட்ட உள்ளாட்சி துறை பணியாளர் சங்கம் - ஏ.ஐ.டி.யு.சி., மாவட்ட நிர்வாகக்குழு கூட்டம் தலைவர் சின்னசாமி தலைமையில் நடந்தது.

ஏ.ஐ.டி.யு.சி., மாவட்ட செயலாளர் குணசேகரன், சங்க மாவட்ட செயலாளர் மணியன், துணை தலைவர் மூர்த்தி, துணை செயலாளர் ஞானசேகரன், பொருளாளர் ரவி உட்பட பலர் பேசினர்.

ஈரோடு மாவட்டத்தில் உள்ள அனைத்து உள்ளாட்சி அமைப்புகளிலும் உள்ள துாய்மை பணியாளர்கள், கொசு ஒழிப்பு பணியாளர்கள், ஓட்டுனர்கள், குடிநீர் வினியோக பணியாளர்கள், துாய்மை காவலர்கள், மகளிர் குழு, ஒப்பந்தம் போன்ற பெயரில் தினக்கூலி தொழிலாளர்களாக பணி செய்கின்றனர். இவர்களுக்கு அரசு நிர்ணயித்த குறைந்த பட்ச ஊதியம், சட்டப்பூர்வமான உரிமைகள் வழங்கப்படுவதில்லை. எனவே, ஒப்பந்த தொழிலாளர் முறையை கைவிட்டு, 480 நாட்கள் பணியாற்றிய தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்து, காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். குறைந்த

பட்ச ஊதியத்தை முன்தேதியிட்டு அமலாக்க வேண்டும். இ.எஸ்.ஐ., திட்டத்தை செயல்படுத்த வேண்டும். துாய்மை பணியாளர்கள் நலவாரியத்தில் பதிவு செய்து, அடையாள அட்டை வழங்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கோரிக்கைகளை வலியுறுத்தி வரும், 7ல் சென்னை தொழிலாளர் ஆணையர் அலுவலகம் முன் நடக்கும் காத்திருப்பு போராட்டத்தில் பங்கேற்பது என முடிவு செய்யப்பட்டது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us