நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அந்தியூர்: மாத்துார் நில கொடியேற்ற கூட்டுறவு சங்கம் சார்பில், அந்தியூர் தாலுகா அலுவலகம் முன், நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. டி.எல்.எம்., ஈரோடு மாவட்ட செயலாளர் சசிகுமார் தலைமை வகித்தார். மாத்துார் கிராம பட்டியல் இன மக்களுக்கு, 250 ஏக்கர் நிலம் இலவசமாக வழங்க, 30 ஆண்டுகளுக்கு முன் அரசாணை பிறப்பிக்கப்பட்டு, இன்று வரை நிலம் வழங்காமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
இது சம்பந்தமாக பல அதிகாரிகளிடத்தில் மனு வழங்கியும் எவ்வித நடவடிக்கையும் இல்லை. இதை கண்டித்தும், மாத்தூர் கிராம ஆதி திராவிட நில குடியேற்ற சங்க உறுப்பினர்களுக்கு, இலவசமாக நிலம் வழங்க கோரியும் ஆர்ப்பாட்டம் நடந்தது.