ADDED : மே 19, 2026 02:25 AM
அ நிறம் | அளவு
ஈரோடு:அனைத்து
தொழிற்சங்கங்கள் சார்பில், ஈரோடு, காந்திஜி சாலை, ஜவான் பவன் முன்
கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. சி.ஐ.டி.யு., மாவட்ட தலைவர்
எஸ்.சுப்பிரமணியன் தலைமை வகித்தார். பெட்ரோல், டீசல் விலை மற்றும்
காஸ் விலை உயர்வை கண்டித்து, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த
விலை உயர்வால், பொருளாதார முடக்கம், பின்னடைவு ஏற்படும். அதனை
தவிர்க்க தேவையான நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கோஷமிட்டனர்.
