/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
ஆர்ப்பாட்டம், போராட்டம் ஓயாது;த.மா.கா., வாசன் ஆருடம்
/
ஆர்ப்பாட்டம், போராட்டம் ஓயாது;த.மா.கா., வாசன் ஆருடம்
ஆர்ப்பாட்டம், போராட்டம் ஓயாது;த.மா.கா., வாசன் ஆருடம்
ஆர்ப்பாட்டம், போராட்டம் ஓயாது;த.மா.கா., வாசன் ஆருடம்
ADDED : டிச 01, 2025 03:11 AM
ஈரோடு:''தி.மு.க அரசு தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாததால், தமிழகத்தில் தேர்தல் அறிவிப்பு வரை ஆர்ப்பாட்டம், போராட்டங்கள் ஓயாது,'' என்று, த.மா.கா., தலைவர் வாசன் கூறினார்.
ஈரோட்டில் நேற்று அவர் கூறியதாவது: ராஜ்பவன் என்ற பெயர், மக்கள் மாளிகையாக மாறியிருப்பதை த.மா.கா., வரவேற்கிறது.
தமிழகத்தில் அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் பா.ஜ.,- த.மா.கா. உள்ளது. இன்னும் ஓரிரு மாதங்களில் மேலும் சில கட்சிகள் கூட்டணியில் சேரும். எஸ்.ஐ.ஆர் மீது நம்பிக்கை வைக்காத அரசியல் கட்சியினர், தேர்தல் மற்றும் வெற்றி மீது நம்பிக்கை இல்லாதவர்கள். தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாததால் தி.மு.க. அரசு மீது மக்கள் அதிருப்தியில் உள்ளனர்.
இதனால் ஆர்ப்பாட்டம், போராட்டங்கள் நடக்கிறது. தேர்தல் அறிவிப்பு வரை இது ஓயப்போவதில்லை. அவர்களாலும் இவற்றை செய்து கொடுக்க முடியாது. ஆட்சி மாற்றத்துக்கு மக்கள் தயாராகி விட்டனர். இவ்வாறு அவர் கூறினார்.

