தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ அரசு பள்ளி மாணவர்களுக்கு நலத்திட்ட உதவி வழங்கல்

அரசு பள்ளி மாணவர்களுக்கு நலத்திட்ட உதவி வழங்கல்

அரசு பள்ளி மாணவர்களுக்கு நலத்திட்ட உதவி வழங்கல்


ADDED : ஜூலை 24, 2025 02:06 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 24, 2025 02:06 AM


Follow on Google
அ நிறம் | அளவு

புன்செய்புளியம்பட்டி, :கோபி சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில், ரூ.31 லட்சம் மதிப்பிலான வளர்ச்சித் திட்ட பணிகளுக்கான பூமி பூஜை நிகழ்ச்சி நேற்று நடந்தது.

முன்னாள் யூனியன் சேர்மன் பழனிசாமி தலைமை வகித்தார். எம்.எல்.ஏ., செங்கோட்டையன் பூமி பூஜை செய்து, பணிகளை துவக்கி வைத்தார். மேலும் காவிலிபாளையம், காராப்பாடி அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவ மாணவியருக்கு டெஸ்க், பெஞ்சுகளை வழங்கியும், 10, 12ம் வகுப்பு பொதுத் தேர்வில் முதல் மூன்று இடங்களை பெற்ற மாணவ, மாணவியருக்கு பரிசு, கேடயங்களை வழங்கி பேசியதாவது:

அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் தரத்தை உயர்த்துவதற்காக, அ.தி.மு.க., ஆட்சியில், 7.5 சதவீத இட ஒதுக்கீடு கொண்டு வரப்பட்டது. அதில், 180 மதிப்பெண் பெற்று ஒரு ரூபாய் கூட செலவு செய்யாமல், அரசு பள்ளி மாணவர்கள் மருத்துவராகும் வரலாறு படைக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டிலேயே பயிலும் மாணவர்கள் மட்டும்தான், பெற்றோரை நேசிப்பதோடு அவர்களது கனவை நிறைவேற்றுகின்றனர். ஆசிரியர்களை குருவாக மதிக்கின்றனர். இந்த பண்புகள் தமிழ் மண்ணில் பிறந்த மாணவர்களுக்கு மட்டும்தான் உள்ளது. இவ்வாறு பேசினார்.

பவானிசாகர் எம்.எல்.ஏ., பண்ணாரி, பி.டி.ஓ., பிரகாஷ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us