/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
ஆதார் சேவை மையத்தில் கூட்டம் அலைக்கழிக்கப்படும் பொதுமக்கள்
/
ஆதார் சேவை மையத்தில் கூட்டம் அலைக்கழிக்கப்படும் பொதுமக்கள்
ஆதார் சேவை மையத்தில் கூட்டம் அலைக்கழிக்கப்படும் பொதுமக்கள்
ஆதார் சேவை மையத்தில் கூட்டம் அலைக்கழிக்கப்படும் பொதுமக்கள்
ADDED : நவ 18, 2025 01:52 AM
அரூர், தர்மபுரி மாவட்டம், அரூர் தாலுகாவில், தீர்த்தமலை, அரூர், மொரப்பூர் வருவாய் உள்வட்டங்களை சேர்ந்த, 150க்கும் மேற்பட்ட வருவாய் கிராமங்கள் உள்ளன. இதை சேர்ந்த பொதுமக்கள், பள்ளி மாணவர்கள் உட்பட அனைவரும், தங்கள் ஆதார் கார்டில் திருத்தம் செய்ய, புதிய ஆதார் கார்டு பெற, அரூர் தாலுகா அலுவலக வளாகத்திலுள்ள ஆதார் மையத்திற்கு வரவேண்டி உள்ளது. இங்கு, எப்போதும் மக்கள் கூட்டம் நிரம்பி வழிவதால், கோட்டப்பட்டி, சிட்லிங் உள்ளிட்ட மலை கிராமங்களில் இருந்து, அதிகாலையில் வரும் பொதுமக்கள் மாலை வரை காத்திருக்கும் நிலையுள்ளது.
இது குறித்து கோட்டப்பட்டியை சேர்ந்த பெண்கள் கூறியதாவது: மாணவ, மாணவியருக்கு ஆதார் கார்டில் பெயர், முகவரி, பிறந்த தேதி உள்ளிட்டவற்றை திருத்தம் செய்வது, மொபைல் எண்ணை இணைப்பது மற்றும் ஆதாரை புதுப்பிப்பதற்கு, அரூர் தாலுகா அலுவலக வளாகத்தில் உள்ள ஆதார் சேவை மையம் மற்றும் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் உள்ள நிரந்தர ஆதார் பதிவு மையத்திற்கு தினமும் ஏராளமானோர்
வருகின்றனர்.
இங்கு, ஒரு நாளைக்கு குறிப்பிட்ட எண்ணிக்கையில் மட்டுமே டோக்கன் வழங்கப்படுவதால் பொதுமக்கள் மிகுந்த சிரமப்படுகின்றனர். 45 கி.மீ., துாரமுள்ள கோட்டப்பட்டி, சிட்லிங் பகுதிகளிலிருந்து கடந்த மூன்று நாட்களாக பள்ளி குழந்தைகளுக்கு புதிதாக ஆதார் எடுப்பதற்கும், ஆதார் திருத்தங்களை செய்வதற்கும், அதிகாலையிலே ஆதார் சேவை மையத்திற்கு வருகிறோம். அடிக்கடி சர்வர் பழுது ஏற்படுவது மற்றும் அதிகளவில் கூட்டம் வருவதால் குழந்தைகளுக்கு ஆதார் எடுக்க முடியாமல் அவதிப்படுகிறோம். அரூர் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் உள்ள நிரந்த ஆதார் பதிவு மையத்திற்குள் செல்வதற்கு, காலை, 10:00 மணிக்கு தான் அனுமதிக்கின்றனர். இதனால், கேட் முன், காலை முதலே, மக்கள் பல மணி நேரம் காத்திருக்கும் அவலநிலை உள்ளது.
மாணவ, மாணவியரின் சிரமத்தை போக்கும் வகையில், பள்ளிகளில் ஆதார் கார்டில் திருத்தம் செய்ய சிறப்பு முகாம் நடத்த வேண்டும். மேலும், கூட்ட நெரிசலை குறைக்க, அரூரில் கூடுதலாக, ஆதார் மையங்களை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு, அவர்கள் கூறினர்.

