ADDED : மார் 14, 2026 04:47 AM
ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில் பொது வினியோக திட்ட குறைதீர் நாள் முகாம் இன்று நடக்கிறது. மாவட்டத்தில் உள்ள, 10 தாலுகா-விலும் தலா ஒரு ரேஷன் கடையில் நடக்கவுள்ளது.
முகாமில் புதிய ரேஷன் கார்டு கோருதல், நகல் அட்டை பெறுதல், பெயர் சேர்த்தல், நீக்குதல், மொபைல் எண் இணைத்தல், மாற்றம் செய்தல் போன்ற கோரிக்கைகளை மனு-வாக வழங்கி தீர்வு பெறலாம்.
ஈரோடு தாலுகாவுக்கு - மேட்டுப்-பாளையம் பேரோடு கிராம ரேஷன் கடையிலும், பெருந்துறை - துடுப்பதி சாணார்பாளையம், மொடக்குறிச்சி - கணபதி நால் ரோடு வேலம்பாளையம் புஞ்சை கொலமங்கலம் 'பி' கிராமம், கொடுமுடி - அஞ்சூர், கோபி - கூகலுார் தண்ணீர்பந்தல்புதுார், நம்பியூர் - சுண்டக்காம்பாளையம், பவானி - சின்னபுலியூர், அந்-தியூர் - பர்கூர் 'பி' கிராமம் தேவர்மலை, சத்தியமங்கலம் - சிக்கர-சம்பாளையம், தாளவாடிக்கு தலமலை தொட்டபுரம் ரேஷன் கடையில் நடக்கிறது
