ADDED : மே 09, 2026 04:30 AM
அ நிறம் | அளவு
ஈரோடு, ஈரோடு மாவட்டத்தில் இன்று, அனைத்து தாலுகாவிலும் தலா ஒரு ரேஷன் கடையில் பொது வினியோக திட்ட குறைதீர் முகாம் நடக்கிறது.
இதில் புதிய ரேஷன் கார்டு கோருதல், நகல் ரேஷன் கார்டு பெறுதல், ரேஷன் கார்டில் பெயர் சேர்த்தல், நீக்குதல், போன் எண் இணைத்தல், மாற்றம் செய்தல் போன்ற கோரிக்கைகளுக்காக விண்ணப்பிக்கலாம்.
ஈரோடு தாலுகாவுக்கு - மேட்டுநாசுவம்பாளையம், சென்னநாயக்கனுார் ரேஷன் கடை, பெருந்துறை - கவுண்டனுார், மொடக்குறிச்சி - கஸ்பாபேட்டை, கொடுமுடி - கொந்தளம், கோபி - அளுக்குளி, நம்பியூர் - குருமந்துார், பவானி - பெரியபுலியூர், அந்தியூர் - முகாசிபுதுார், சத்தியமங்கலம் - புளியம்பட்டி பிரிவு அரியப்பம்பாளையம், தாளவாடிக்கு - ஒசூர் ரேஷன் கடையில் முகாம் நடக்கிறது.
