ADDED : நவ 13, 2026 06:17 AM
ஈரோடு:ஈரோடு
மாவட்டத்தில் பொது வினியோக திட்ட குறைதீர் முகாம் வரும், 14 ல்
அனைத்து தாலுகாவிலும் தலா ஒரு ரேஷன் கடையில் நடக்க உள்ளது. புதிய ரேஷன்
கார்டு பெறுதல், நகல் ரேஷன் கார்டு பெறுதல், ரேஷன் கார்டில் பெயர்
சேர்த்தல், நீக்கம் செய்தல், மொபைல் எண் இணைத்தல் உள்ளிட்ட
கோரிக்கைகளுக்கு மனுக்கள் வழங்கி, முகாமில் தீர்வு பெறலாம்.
தாலுகா
வாரியாக ஈரோட்டுக்கு - காளிங்கராயன்பாளையம்
மேட்டுநாசுவம்பாளையம் ரேஷன் கடையில் நடக்கிறது. இதேபோல்
பெருந்துறை - பெத்தாம்பாளையம், மொடக்குறிச்சி - விளக்கேத்தி,
கொடுமுடி - ஆவுடையார்பாறை, கோபி - ஊஞ்சபாளையம் ஓடையக்கவுண்டன்
பாளையம், நம்பியூர் - பொலவபாளையம், பவானி - ஒலகடம், அந்தியூர் -
மூங்கில்பட்டி, சத்தியமங்கலம் - அய்யம்பாளையம்
பெரியகள்ளிப்பட்டி, தாளவாடி - மல்லன்குழி ரேஷன் கடையில் முகாம் நடக்கிறது.
