ADDED : ஜூன் 13, 2026 03:52 AM
அ நிறம் | அளவு
ஈரோடு:ஈரோடு
மாவட்டத்தில் பொது வினியோக திட்ட குறைதீர் முகாம் இன்று, 10
தாலுகாவிலும் தலா ஒரு ரேஷன் கடையில் நடக்க உள்ளது. புதிய ரேஷன் கார்டு
கோருதல், நகல் அட்டை பெறுதல், ரேஷன் கார்டில் பெயர் சேர்த்தல்,
நீக்குதல், மொபைல் எண் இணைத்தல், மாற்றம் செய்தல் தொடர்பாக மனு வழங்கி
தீர்வு பெறலாம்.
ஈரோடு தாலுகாவுக்கு - மாமரத்துப்பாளையம்
கங்காபுரம் ரேஷன் கடை, பெருந்துறை- சென்னியவலசு, மொடக்குறிச்சி -
உத்தண்டிபாளையம் புஞ்சை காளமங்கலம், கொடுமுடி -
வேங்கியம்பாளையம் பாசூர், கோபி-நாகதேவம்பாளையம்,
நம்பியூர்-கடத்துார், பவானி - குறிச்சி, அந்தியூர் -
ஊமாரெட்டியூர், சத்தியமங்கலம் - கெம்பநாயக்கன்பாளையம்-1,
தாளவாடி - பனகஹள்ளி ரேஷன் கடையில் முகாம் நடக்கிறது.
