/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
ரூ.2.63 கோடி மதிப்பில் புதிய பணிகளுக்கு பூஜை
/
ரூ.2.63 கோடி மதிப்பில் புதிய பணிகளுக்கு பூஜை
ADDED : செப் 24, 2024 02:57 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நம்பியூர்: நம்பியூர் ஊராட்சி ஒன்றியத்தில், 2.63 கோடி ரூபாய் மதிப்பில் பல்வேறு பணிகள், நேற்று பூஜை செய்து தொடங்கி வைக்கப்பட்டது. நம்பியூர் சேர்மேன் சுப்பிரமணியம் தலைமை வகித்தார். நம்பியூர் ஒன்றிய அ.தி.மு.க., செயலாளர் தம்பி சுப்பிரமணியம், ஒன்றிய கவுன்சிலர் ரங்கசாமி, ஊராட்சி தலைவர் திருமூர்த்தி முன்னிலை வகித்தனர்.
கோபி எம்.எல்.ஏ., செங்கோட்டையன் புதிய பணிகளுக்கு பூஜையும், கட்டி முடிக்கப்பட்ட பள்ளி கட்டடம், மேல்நிலை தொட்டி உள்ளிட்ட பல்வேறு பணிகளை தொடங்கி வைத்தார்.

