/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
புரட்டாசி தேர் திருவிழா 26ம் தேதி தொடக்கம்
/
புரட்டாசி தேர் திருவிழா 26ம் தேதி தொடக்கம்
ADDED : செப் 21, 2025 01:00 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு, ஈரோடு கோட்டை கஸ்துாரி அரங்கநாதர் கோவிலில் நடப்பாண்டு புரட்டாசி தேர் திருவிழா, வரும், 26ல் கிராம சாந்தியுடன் துவங்குகிறது. 27ம் தேதி இரவு அன்னபட்சி வாகனம், 28ல் சிம்ம வாகனம், 29ல் அனுமந்த வாகனம், 30ல் கருட சேவை, அக்.,1ல் யானை வாகனத்தில் சுவாமி புறப்பாடு நடக்கிறது
. 2ம் தேதி மாலை திருக்கல்யாண உற்சவம் நடக்கிறது. 3ம் தேதி காலை, 9:15 மணிக்கு தேர் வடம் பிடித்தல், 4ல் குதிரை வாகனம், 5ல் சேஷ வாகனத்தில் சுவாமி புறப்பாடு நடக்கிறது. 6ல் தீர்த்தவாரி, கொடியிறக்கம், ஆஞ்சநேயருக்கு வடை மாலை சாற்றுதலுடன் நிறைவு பெறுகிறது.

