/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
சாலையோரம் வீசப்பட்ட 'தரமான மாத்திரைகள்'
/
சாலையோரம் வீசப்பட்ட 'தரமான மாத்திரைகள்'
ADDED : நவ 27, 2024 12:52 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சாலையோரம் வீசப்பட்ட 'தரமான மாத்திரைகள்'
ஈரோடு, நவ. 27-
ஈரோடு, தில்லை நகர், தெப்பக்குளம் வீதியில் மருந்து, மாத்திரைகள் குவியலாக நேற்று மாலை கொட்டப்பட்டிருந்தது.
இதை பார்த்த அப்பகுதி மக்கள், மாநகராட்சிக்கு தகவல் தெரிவித்தனர். அங்கு சென்ற மாநகராட்சி பணியாளர்கள் கைப்பற்றினர்.
வரும், 2025ம் ஆண்டு வரை பயன்படுத்தக்கூடிய, கர்ப்பிணிகளுக்கு வழங்கப்படும் சத்து மாத்திரை என தெரிய வந்தது.
காலாவதியாகும் முன் சாலையோரம் வீசப்பட்டதற்கான காரணம் தெரியவில்லை.
தனியார் மருத்துவமனை இந்த செயலில் ஈடுபட்டதா அல்லது அரசு மருத்துவமனை பணியாளர்கள் இதில் ஈடுபட்டனரா? என, மாநகராட்சி நல அலுவலக அலுவலர்கள் விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.

