ADDED : செப் 17, 2026 06:38 AM

அ நிறம் | அளவு
ஈரோடு:ஈரோடு
மாவட்டத்தில் அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகளில்,
3 முதல் 10ம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவியருக்கு காலாண்டு தேர்வு
நேற்று துவங்கியது. இவர்களுக்கு வரும், 24ல் தேர்வு நிறைவு
பெறுகிறது.
பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 வகுப்புக்கு இன்று தேர்வு
துவங்குகிறது. வரும் 25ல் நிறைவு பெறுகிறது. மாணவ, மாணவியர்
பள்ளியிலேயே தேர்வுக்கு தங்களை தயார்படுத்தி கொள்ள வகுப்புகள்
நடக்கிறது. ஈரோடு ப.செ.பார்க் அரசு மகளிர் மாதிரி மேல்நிலைப்
பள்ளியில் நேற்று 10ம் வகுப்பு மாணவியருக்கு காலாண்டு தேர்வு
துவங்கியது. பள்ளி தலைமை ஆசிரியை சுகந்தி பார்வையிட்டார்.
