ADDED : ஆக 31, 2026 06:09 AM
அ நிறம் | அளவு
ஈரோடு:ஈரோடு
காரைவாய்க்கால் அருகேயுள்ள பேஜாவர மடம், ராத்திரி சத்திரத்தில்
ராகவேந்திர சுவாமிகளின், 355வது ஆராதன மஹோத்ஸவம் நேற்று நடந்தது.
காலையில் நிர்மாலய விசர்ஜனத்தை தொடர்ந்து சுவாமிக்கு பஞ்சாமிர்த
அபிஷேகம், கனகாபிஷேகம் நடந்தது. அதை தொடர்ந்த ஹரி நாம
சங்கீர்த்தனை, தீபாராதனை காட்டப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள்
கலந்து கொண்டனர்.
இதேபோல் அக்ரஹார வீதி பாதராஜ மடத்தில்
ராகவேந்திர சுவாமி ஆராதனை விழா நடந்தது. இதில் ஸ்தோத்திர ஹோமம்,
பார்வதி சுயம்வர ஹோமம் நடந்தது. அதை தொடர்ந்து துலாபார உற்சவம்
மற்றும் ஸ்ரீராகவேந்திர சுவாமிகளின் மஹிமை சொற்பொழிவு நடந்தது.
