ADDED : டிச 14, 2025 05:40 AM

அ நிறம் | அளவு
ஈரோடு: ஈரோடு கொல்லம்பாளையம் ரயில்வே நுழைவு பாலம் சேதமா-னதால், கடந்த, 4ம் தேதி வீட்டு வசதி துறை அமைச்சர் முத்து-சாமி ஆய்வு செய்தார். அன்றிரவே சீரமைப்பு பணி தொடங்கி-யது.
இதனால் பாலத்தில் போக்குவரத்து தடை செய்யப்பட்டது. பாலத்தின் ஒருபுறம் சீரமைப்பு பணி மூன்று நாட்களில் நிறைவு பெற்றது. மற்றொரு புறம் சீரமைப்பு பணி துவங்கி நடந்தது. நேற்று முன் தினம் வரை சீரமைப்பு பணிகள் நடந்தன. முழுமை-யாக நிறைவு பெற்ற நிலையில் நேற்று மாலை பாலத்தின் இருபு-றமும் போக்குவரத்துக்கு திறக்கப்பட்டது. பாலத்தின் கீழ்புற பகு-தியில் சீரமைப்பு பணி நிறைவு பெற்றதால் வாகன ஓட்டிகள் நிம்-மதி அடைந்துள்ளனர். பாலத்தின் கீழ்புறம் தேங்கும் நீர், மோட்டர் மூலம் உறிஞ்சி அகற்ற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
